ஹைட்ரோகுளோரோகுயின் குணமாக்கவில்லை! அமெரிக்க ஆய்வில் பகீர் தகவல்!

23 April 2020 அரசியல்
coronavirususa19.jpg

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரையானது, கொரோனா வைரஸ் பாதிப்பினைக் குணமாக்கவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்பொழுது அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர், அமெரிக்காவில் மரணமடைந்து வருகின்றனர். தற்பொழுது வரையிலும், சுமார், 8,52,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 77,210 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 47,750 பேர் துரதிர்ஷ்டவசமாக இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக மரணமடைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வைரஸிற்கான மாத்திரையினை உருவாக்கும் முயற்சியில், உலக நாடுகள் பலவும் முயற்சித்து வருகின்றனர். இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதனால், பல மருந்துகளை பயன்படுத்தி, இந்த வைரஸ் பாதிப்பினைக் குறைக்க முயற்சித்து வருகின்றன. இந்த வைரஸைக் குணப்படுத்துவதற்கு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையானது அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், இந்திய அரசாங்கம் அதனை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது.

இந்த மாத்திரைகளை அமெரிக்க அரசாங்கம் அதிகளவில் வாங்கி, ஸ்டாக் வைத்துள்ளது. நிபுணர்களின் கணக்குப் படி, சுமார் 3 கோடி மாத்திரைகளை அந்நாடு ஸ்டாக் வைத்திருக்கலாம் என்றுக் கூறப்படுகின்றது. இந்த மாத்திரைக் குறித்து, அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழகமானது, அமெரிக்க தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து ஆய்வு செய்தது.

அந்த ஆய்வானது, 883 பேர் மீது நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், இந்த கொரோனா வைரஸினை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையானது, குணப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல நல்ல அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இந்த ஆய்வறிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

HOT NEWS