இந்தியாவிற்கு பொருளாதாரத் தடை எச்சரிக்கை! யோசிக்கும் அமெரிக்கா!

22 May 2020 அரசியல்
armymissile.jpg

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள இந்தியாவிற்கு, பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை வாங்க, இந்திய அரசு முடிவு செய்தது. அதற்காக 5 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. மொத்தம் ஐந்து புதிய எஸ்400 ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட அமெரிக்க அரசு, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால், கண்டிப்பாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

ஆனால், இந்தியா அதனைப் பொருட்டாக மதிக்கவே இல்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால், அமெரிக்க அரசாங்கம் கடும் எரிச்சல் அடைந்துள்ளது. இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றுக் கூறப்பட்ட நிலையில், அந்நாட்டின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், இந்தியா தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதன் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து, அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர நடவடிக்கைகளை கையாள வேண்டி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து யார் ஆயுதங்களை வாங்கினாலும், கண்டிப்பாக அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

தொடர்ந்து பல நாடுகளுக்குத் தங்களுடைய ஆயுதங்களை விற்று, தன் நாட்டின் செல்வ வளத்தினை ரஷ்ய பெருக்கிக் கொள்கின்றது. அதுமட்டுமின்றி, அந்தப் பணத்தினை வைத்து, பலப் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. எனவே தான், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்கா தற்பொழுதுள்ள சூழ்நிலையில், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது அமெரிக்காவிற்குத் தான் ஆபத்து என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்தியா மீது எவ்விதத் தடையையும் அமெரிக்கா விதிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

HOT NEWS