அமெரிக்காவிற்கு எதிராக சீனா வெள்ளை அறிக்கை!

02 June 2019 அரசியல்
container.jpg

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவிற்கும், உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுக்கும் இடையே, புகைந்து வருகிறது.

அமெரிக்க அதிபராக டிரெம்ப் பதவியேற்றப் பிறகு, பல்வேறு வரித் திட்டங்களையும், வேலைவாய்ப்பு சட்டங்களையும் கடுமையாக அமல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடும் விரக்தியில் உள்ளன. இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அதிக வரியினை விதித்தார். இதனால், அமெரிக்காவில் சீனப் பொருட்களின் விலை உயர்வால், அவைகளின் விற்பனைக் குறைந்தது.

இந்நிலையில், அமெரிக்காவிற்குப் போட்டியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களும் பாரபட்சமின்றி, வரியினை தாராளமாக உயர்த்தியது. இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவிற்கு எதிராக வெள்ளை அறிக்கையை, சீனா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவின் இந்த பொருளாதார நடவடிக்கையால், உலக பொருளாதாரம் தடுமாறி வருகிறது. அனைத்து நாடுகளின் வியாபாரம் மற்றும் வர்த்தகம் கேள்விக் குறியாக உள்ளது. இதனை அமெரிக்க அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

HOT NEWS