துருக்கி மீது பொருளாதாரத் தடை! தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த அமெரிக்கா!

15 October 2019 அரசியல்
syriantroops.jpg

Pic Credit:youtube.com

சிரியா நாட்டில் உள்நாட்டுப் பிரச்சனைகளில், வெளிநாட்டினர் பலர் நுழைந்து குழப்பிக் கொண்டு இருக்கையில், துருக்கி நாடு சிரியாவில் உள்ள குர்த் இன மக்கள் மீது, தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், துருக்கி நாட்டிற்கு பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.

திங்கட்கிழமை (14-10-2019) அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக, துருக்கி அதிபர் எட்ரகானிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில், சிரியா மீதானத் தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். இதனை, நேற்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் கூறுகையில், அமெரிக்கப் படைகள், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளில் இருந்து, வெளியேற அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனையடுத்து, துருக்கிப் படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குர்த் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா மீது, தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் துருக்கியுடனான 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

HOT NEWS