கடற்படையினை நெருங்கினால் அவ்வளவு தான்! ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

21 May 2020 அரசியல்
shipcannon.jpg

எங்கள் கடற்படைக் கப்பல்கள் அருகில் நெருங்கினால், கடுமையான பாதிப்பினை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க அரசாங்கம், ஈரான் நாட்டினை கடுமையாக எச்சரித்து உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் நல்ல உறவு நிலை இல்லை. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலும், போர் நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான குவாசிம் சுலைமானியினை, அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதனால், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீது, ஈரான் தன்னுடைய ஆதரவு குழுக்கள் மூலம் தாக்குதல்களை அவ்வப்பொழுது நடத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்கள், ஈரான் நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவைகள் மீது, அவ்வப்பொழுது, ஈரான் கடற்படைக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி வருகின்றது.

இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடும் எதிர்ப்பினை அமெரிக்கா தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது மீண்டும் தன்னுடைய எதிர்ப்பினை, அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனி ஒருமுறை, அமெரிக்காவின் கப்பல்களுக்கு 100 மீட்டர் அருகில் சென்றால், கண்டிப்பாக பெரிய தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளது.

HOT NEWS