ப்யூர் இண்டர்நெட்! உலக நாடுகளுக்கு அமெரிக்க அழைப்பு! சீனாவினை முடக்க புதிய முயற்சி!

03 September 2020 அரசியல்
internetearth.jpg

தூய்மையான இண்டர்நெட்டினை உருவாக்க, உலக நாடுகளுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.

உலகம் முழுக்க சீனாவின் பல போலி செயலிகளானது, ஆப் ஸ்டோர்கள் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க அரசு 5ஜி தொழில்நுட்பத்திற்கான முக்கிய முடிவுகளை அறிவித்தது. அதன்படி, தூய்மையான இணையம் என்ற திட்டத்தினை உருவாக்கி உள்ளது. அதில் அனைத்து நாடுகளும் இணையலாம் என்றுக் கூறியுள்ளது.

இது குறித்து பேசிய, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமெரிக்க செயலாளர் கீத் க்ராட்ச் பேசுகையில், இந்தியா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளை தடை செய்துள்ளது. சுதந்திரத்தினை விரும்பும் எந்த நாடும், இந்த தூய்மையான இண்டர்நெட் திட்டத்தில் இணையலாம் என்றுக் கூறியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து, பாதுகாப்பற்ற செயலிகளை நீக்குவதற்கான திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS