59 சீன ஆப்களை தடை செய்த இந்தியாவின் முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு!

02 July 2020 அரசியல்
mikepompeo.jpg

சீனாவின் 59 ஸ்மார்ட்போன் ஆப்களை, இந்திய அரசு தடை செய்தது. இதற்குத் தற்பொழுது அமெரிக்கா தன்னுடைய வரவேற்பினைத் தெரிவித்து உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் ஏற்பட்டு உள்ளது. இரண்டு நாடுகளும், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், தங்களுடைய படைகளை குவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், பயனர்களின் தகவல்களுக்கு ஆபத்து என, இந்திய உளவுத்துறையும், தொழில்நுட்பப் பிரிவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றினை விடுத்தது.

அதில், சீனாவின் 59 ஆப்கள் மிகவும் மோசமானதாக இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது சீனாவின் 59 ஆப்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனை இந்தியர்கள் வரவேற்று உள்ளனர். இதற்கு சீனா தன்னுடைய வருத்தத்தினை தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் இந்த முடிவிற்கு அமெரிக்க தங்களுடைய வரவேற்பினைத் தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள அமெரிக்காவின் மைக் பாம்பியோ பேசுகையில், கம்யூனிச சீனாவின் இந்த மோசமான ஆப்களை தடை செய்ததற்கு அமெரிக்க வரவேற்புத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS