குடியுரிமை வழங்க மதத்தினை கையிலெடுத்துள்ளது இந்தியா! அமெரிக்கா கவலை!

11 December 2019 அரசியல்
amithshahlatest19.jpg

இந்தியாவின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவிற்கு, அமெரிக்க மத சுதந்திரத்திற்கான ஆணையம் கவலைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது மக்களவையில் நிறைவேற்றபட்டுள்ள, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவால் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனவும், இது மத சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் கூறியுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவில் இருந்து, இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தினை கையில் எடுத்துள்ளதாக தெரிகின்றது எனவும், அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இரண்டாவது அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத சுதந்திர ஆணையம் அமெரிக்க அதிபருக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறியுள்ள இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என, மக்களவையில், இந்தியக் குடியுரிமை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS