ஏப்ரல் 5ம் தேதி 9 நிமிடம் விளக்குளை அணையுங்கள்! தீபம் ஏற்றுங்கள்!

03 April 2020 அரசியல்
modicorona19.jpg

ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு, வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, ஒரு ஒன்பது நிமிடங்கள் விளக்குகளை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஒன்பது மணியளவில், புதிய வீடியோ ஒன்றில், பிரதமர் மோடித் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், இந்திய மக்கள் அனைவரும், கொரோனா வைரஸிற்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடி வருகின்றீர்கள். அதற்கு தன்னுடையப் பாராட்டினைத் தெரிவித்தார். வீட்டிலிருந்து ஒன்றிணைந்தால் மட்டும் தான், இந்த கொரோனாவை விரட்ட முடியும் என்றார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டும் என்றுக் கோரிக்கையும் விடுத்தார். ஏற்கனவே மார்ச் 22ம் தேதி அன்று, கொரோனாவிற்கு எதிராக போராடும் மக்களுக்கு நன்றி தெரிவித்தது தனித்துவம் வாய்ந்தது என்றார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தே, இந்த முயற்சியில் ஈடுபட்டீர்கள் என்றார்.

அதே போல், வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து, கையில் டார்ச் அல்லது விளக்குகளை ஏற்றி, ஒன்பது நிமிடம் காட்டுங்கள். அதன் மூலம், நாம் யாரும் தனியாக இல்லை என்பதையும், 130 கோடி இந்தியர்களின் பலத்தினையும் உலகிற்கு உணர்த்துவோம் என்றார்.

இவைகளை விட, வீட்டில் உள்ள பால்கனி, மொட்டை மாடிகள் போன்றவைகளில் இருந்தே இதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்காக யாரும் வீதிக்கு வரக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS