நிமிட்ஸ் கப்பலில் வேலை செய்ததே ஏலியன்களிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றத் தான்!

11 April 2020 கதைகள்
ussnimitz.jpg

அமெரிக்காவிற்கும், மர்மங்களுக்கும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. அப்படியொரு உறவு. அமெரிக்கா செய்யும் ஆராய்ச்சிகள் முதல், அவர்களின் கண்டுபிடிப்புகள் வரை, பல மர்மக் கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இருப்பினும், இவைகளை யாராலும், ஆதாரப்பூர்வமாக இன்று வரை நிரூபிக்கவில்லை.

அப்படியொரு மற்றொரு மர்மம் தான் இந்த ஏலியன் ஆராய்ச்சி. அமெரிக்கா நாடானது, தன்னுடைய பாதுகாப்பிற்காக, உலகின் நம்பர் ஒன் போர்கப்பலான நிமிட்ஸ் போர்க்கப்பலை உருவாக்கியது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், பல ஆயுதங்களைக் கொண்டதாகவும் இந்தக் கப்பல் இருந்து வந்தது.

இந்தக் கப்பலானது, ஏலியன்களின் பறக்கும் தட்டுகளிடம் இருந்து, அமெரிக்காவினை பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என, அக்கப்பலில் வேலை செய்த கேப்டன் ஹில்லர் கூறியுள்ளார். இது தற்பொழுது, சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கக் கடற்பகுதிகளில், அதிகளவில் பறக்கும் தட்டுகள் வரும் எனவும், அவைகளை சுட்டு வீழ்த்துவதும், அந்தப் போர்க்கப்பல் இருந்த போர் விமானங்களைப் பயன்படுத்தி, பறக்கும் தட்டுகளை விரட்டுவதும் தங்களுடைய வேலை எனக் கூறியுள்ளர்.

அவர், ஆகஸ்ட் 1ம் தேதி 2019ம் ஆண்டு அன்று, யூஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பலுக்கு, கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னதாக, அவர் அமெரிக்க இராணுவ மற்றும் கப்பற்படைக் கல்லூரியில் படித்துள்ளார். இவர் கூறுகையில், தங்களுக்குத் தற்பொழுது வரை, எதிர்த்து வருவது எது எனத் தெரியாது. இருப்பினும், நாங்கள் வீரமாக எதிர் கொள்வோம்.

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கருத்தில் அவைகளைப் பின் தொடர்வோம். எங்களுடைய ரேடாரில் சந்தேகப்படும் வேகத்தில், ஒரு சில பொருட்கள் மிக வேகமாகப் பறக்கும். அவைகளை சுட்டு வீழ்த்துவதும், அவைகளைப் பின்தொடர்வதும் எங்கள் வேலை எனக் கூறியுள்ளார்.

இதனை பால் சீபர்ன் தன்னுடைய மிஸ்டீரியஸ் யூனிவர்ஸ் என்ற வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

HOT NEWS