இந்தியாவிற்காக வந்த அமெரிக்க போர் கப்பல்கள்! சீனா பீதி!

04 July 2020 அரசியல்
ussnimitz.jpg

இந்தியாவிற்கு ஆதரவாக தன்னுடைய இரண்டு விமானம் தாங்கிப் போர் கப்பல்களை, தற்பொழுது அமெரிக்க அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாட்டு இராணுவமும், தன்னுடையப் படைகளை குவித்த வண்ணம் உள்ளன. இதனால், உலக நாடுகள் அனைத்தும் தற்பொழுது இந்த சூழ்நிலையினை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தொடர்ந்து, சீனாவின் செயலுக்கு அமெரிக்க அரசு தன்னுடைய கண்டனத்தினைத் தெரிவித்து வருகின்றது.

ஏற்கனவே, சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொடர்ந்து சீனா மீது பகிரங்கக் குற்றச்சாட்டினை அமெரிக்காவும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சுமத்தி வருகின்றனர். இந்த வைரஸானது, சீனாவின் ஊஹான் வைரஸ் லேபில் இருந்தே பரவ ஆரம்பித்தது எனவும், சீனா தான் இதனைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றது எனவும் குற்றம் சாட்டி வருகின்றது.

அதுமட்டுமின்றி, ஹாங்காங்கில் சீனா அத்துமீறி தன்னுடைய ஆதிக்கத்தினை செலுத்த நினைப்பதற்கும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவின் நெருக்கமான நாடாக இருக்கும் அமெரிக்கா, தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையில் லடாக் பகுதியில் நிலவும் பதற்றத்தினைப் பயன்படுத்தி, சீனாவினை பழிவாங்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

தற்பொழுது இந்தியாவிற்கு ஆதரவாக, தென்சீனக் கடலுக்கு தன்னுடைய உலகின் தலைசிறந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலான, யூஎஸ்எஸ் நிமிட்ஸ் உள்ளிட்டப் போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த போர்க்கப்பல்கள், சீனாவின் அத்துமீறலைக் கடற்பகுதியில் சர்வசாதாரணமாக முறியடிக்கும் வலிமைப் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS