உத்ரகாண்டில் வெள்ளப் பெருக்கு! மீட்புப் படையினர் குவிப்பு! 170 பேர் பலி?

08 February 2021 அரசியல்
utharakandflood.jpg

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், தற்பொழுது இந்திய இராணுவம் முழு வீச்சில் இறங்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகப் பனிப் பொழிவின் காரணமாக, திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக, மலைப் பகுதியில் இருந்த பனிப் பாறைகள் உருகி சரிந்தன. அதிக வெப்பமயமாதலின் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக, பனிப்பாறைகள் உருகி, பெரும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள தௌளிகங்கா, அலக்நந்தா என்ற ஆறுகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

திடீரென்று ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நீரோட்டத்தின் காரணமாக, அங்கு கட்டப்பட்டு இருந்த அணையானது உடைந்தது. இதனால், ரிசிகங்கா மின்நிலையமானது பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தால் 5 பாலங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. அங்குள்ள மலைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 நீர்மின் நிலையங்களும், கடுமையான அபாயத்தில் உள்ளன.

இந்த வெள்ளத்தால் நீர் மின் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டு உள்ளது. பல பேரினை காணவில்லை. இந்த வெள்ளத்தினைத் தொடர்ந்து, ஆற்றின் கரையோறங்களில் தங்கியிருந்த பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் எனப் பலரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த திடீர் வெள்ளமானது, இந்திய அளவில் சோகமானதாக ஒன்றாக பேசப்பட்டு வருகின்றது.

HOT NEWS