இந்தியாவில் ஜனநாயகமும் சுதந்திரமும் அழிந்து வருகின்றது! பிரபல அமைப்பு கவலை!

05 November 2020 அரசியல்
old-newspaper.jpg

இந்தியாவில் ஜனநாயகமும், பத்திரிக்கை சுதந்திரும் அழிந்து வருவதாக, பிரபல ஸ்வீடன் அமைப்பான வீ டெம் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளைப் பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஸவீடன் நாட்டினைச் சேர்ந்த வீ டெம் இன்ஸ்ட்டிடியூட் ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அவ்வாறு செய்வதற்கு பல ஆயிரம் பேரினை, ஆய்விற்கிப் பயன்படுத்துகின்றது. அப்படி ஒரு ஆய்வினை இந்தியாவின் மீது செய்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன.

அதில், கடந்த 2002ல் இருந்ததை விட, தற்பொழுது இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம், ஜனநாயகம், சிவில் சொசைட்டி உள்ளிட்டவைகள் அழிவினை நோக்கி நகர்ந்து வருவதாக கூறியுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்ற பாஜக அரசானது, அடக்குமுறைகளை செய்து வருவதாகவும், அதனை எதிர்க்க வேண்டிய எதிர் கட்சிகளோ முறையாக செயல்படவில்லை எனவும் அது கண்டுபிடித்து உள்ளது. காஷ்மீருக்குரிய சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக, பல ஆயிரம் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமிய மக்களுக்குரிய குடியுரிமை மறுப்பு போன்றவைகளை என்டிஏ அரசு செய்து வருவதாகக் கூறியுள்ளது. எதிர்கட்சிகளின் கருத்துக்களை கூட, ஆளும் அரசு கேட்பத்தில்லை எனவும், முக்கியமான விஷயங்களின் மக்களின் கருத்துக்கள் மதிக்கப்படுவது கிடையாது எனவும் கூறியுள்ளது. மேலும் பல தவறான முறைகளில், கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியினை பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

போராடுகின்ற மாணவர்கள் சிறைக்கு செல்கின்றார்கள் எனவும், ஆளும் அரசிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவருமே ஆன்டி இந்தியன் எனவும் கூறப்படுகின்றனர். அல்லது அர்பன் நக்சல்கள் எனவும் கான் மார்கெட் கேங் எனவும் விமர்சிக்கப்படுகின்றனர் எனவும், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களின் மீது அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுவதாகவும் கூறியுள்ளது. மேலும் 20,000க்கும் அதிகமான சிவில் அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியினை பெறுவதை இந்த அரசு நிறுத்தியுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலை நீடித்தால், விரைவில் இந்தியாவின் ஜனநாயகமும் படுகுழியில் விழுந்து விடும் எனவும், எச்சரிக்கை செய்து உள்ளது.

HOT NEWS