இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தில், இரண்டு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைப்புலி தாணு தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்க உள்ளத் திரைப்படம் வாடிவாசல். இத்திரைப்படமானது, வருகின்ற 2021ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு, இத்திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில், நடிப்பதற்கான பிற நடிகர் மற்றும் நடிகையர்களை படக்குழுவினர் ஊரடங்கு முடிந்ததும் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை மற்றும் மகன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தந்தை சூர்யா ஜல்லிக்கட்டில் மரணமடைந்து விடுவது போலும், மகன் பின்னர் என்ன செய்வார் என்பது பற்றியும் கதை எழுதப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. இந்த செய்தியால், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.