திமுக மேடையில் விஜயகாந்தினை தாக்கிப் பேசிய பிறகு, பெரும்பாலான மேடைகளையும், கலைநிகழ்ச்சிகளையும் நடிகர் வடிவேலு தவிர்த்து வந்தார்.
அவர், தற்பொழுது கமல் 60 விழாவில் கலந்து கொண்டு, மேடையில் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், கால் வைக்கும் முன்னரே, கண்ணி வெடியினை வைக்கின்றார்கள். இவருக்கு (கமல்) எத்தனை ஏவுகணை விட்டுருப்பாங்க! எத்தனைப் பாம் வச்சிருப்பாங்க! தவ்வ வேண்டிய இடத்தில் தவ்வுறது, மூழ்க வேண்டிய இடத்தில் மூழ்குவது, பறக்க வேண்டிய இடத்தில் பறப்பது, மறைய வேண்டிய இடத்தில் மறைவது, எல்லா வித்தையையும் கத்துக்கிட்டு, இங்க நிக்கிறார்னா இவர் மாதிரி ஒரு உதாரணமே கிடையாது.
நான் ராஜ்கிரண் சார் மூலமா, திரை உலகிற்கு வந்தேன். அடுத்த இரண்டு படத்தில அண்ணன் கமல் கூட நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. நாளை காலையில் வந்து என் அலுவலகத்தில் என்னைப் பாருங்கள் என்றார். நான் அன்றே அவர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். மாலையில், அவர் அலுவலகத்திற்கு வந்தார். என்ன நீங்க இப்பவே வந்துட்டீங்க! உங்கள காலைல தானே வரச் சொன்னேன் என்று கேட்டார். அதற்கு நான், நீங்க கூப்பிட்ட உடனே, என் வாழ்க்கையே விடிஞ்சிருச்சி சார் என்றேன்.
அந்தப் படம் தான் தேவர்மகன். ஒரு பக்கம் கமல்ஹாசன் மறு பக்கம் சிவாஜி கணேசன் என்ற, இரு மாபெரும் துருவங்களுடன் நடித்ததை இன்றும் என்னால் மறக்க இயலாது, என்று பேசினார்.
என்ன மனுசன் @Actor_Vadivelu Fantabulous Speech😍👇
— Roman Empire (@positivevibessa) November 17, 2019
#vaigaipuyal #vadivelu #VadiveluForLife #UngalNaan #Kamal60 pic.twitter.com/DNqc2kLHlj
#Vadivel Speech at #Kamal60#UngalNaan pic.twitter.com/5IPUySiB70
— Roman Empire (@positivevibessa) November 17, 2019