வருகின்ற 2021ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், நான் முதல்வராவேன் என, வைகைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றிருந்த வடிவேலு, அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம், ரஜினியின் அரசியல் வருகைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், அவர் அரசியலுக்கு வருவது கடவுளுக்கு மட்டுமே தெரியும். எனக்குத் தெரியாது, அவருக்கும் தெரியாது என்றார். அவரிடம், இன்று ரஜினிகாந்த் பேசியது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், அவர் (ரஜினிகாந்த்) நன்றாகத் தானே கூறியுள்ளார். அதிலென்ன தவறு உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்தால் நல்லது தானே. அடுத்து வர உள்ள 2021ம் ஆண்டுத் தேர்தலில், நான் தான் தமிழக முதல்வராவேன் என மிகக் கிண்டலாக வடிவேலு பேசிவிட்டுச் சென்றார்.