வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்! பகற்பத்து இராபத்து சேவை ஆரம்பமானது!

12 December 2020 அரசியல்
srirangamvimanam.jpg

இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவானது, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் துவங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் இந்த விழாவானது கொண்டாடப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த விழாவானது எளிமையாகக் கொண்டாடப்படுகின்றது. இதன் முற்கட்டமாக, இன்று இரவு 7 மணிக்கு இந்த விழாவானது பகற்பத்து சேவையுடன் துவங்குகின்றது.

டிசம்பர் 15ம் தேதி அன்று காலையில் பகற்பத்து சேவை விமர்சையாக ஆரம்பமாகின்றது. அன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரையிலும், காலையில் உற்சவர் நம்பெருமாள் முன், நாலாயிரத் திவ்யப் பிரபந்தமானது பாடப்படும். பின்னர், டிசம்பர் 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, பரம்பத வாசல் வழியாக அதிகாலை 4.45 மணியளவில் நம்பெருமாள் வருவார். அன்று வைகுண்ட ஏகாதசியானது கொண்டாடப்படும். பின்னர், இராப் பத்து சேவையானது அடுத்தப் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும். சொர்க்கவாசலானது 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பகல் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பின்னர் 31ம் தேதி அன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். பக்தர்கள் அனுமதியானது இந்த ஆண்டு வழங்கப்படுமா என, பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

HOT NEWS