நேற்று அஜித் குமார் நடிக்க உள்ள, தல 60 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது. மேலும், படத்தின் பெயர் வலிமை என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர். டிவிட்டரில் விடிய விடிய டிவீட் செய்து, தற்பொழுது வலிமை ஹேஸ்டேக் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மொத்தமாக 20 லட்சம் டிவீட்களுக்கும் அதிகமாகப் பெற்று, வலிமை திரைப்படம் புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன், விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பெயரினை, விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். அதில் 10 முதல் 15 லட்சம் டிவீட்களே செய்திருந்தனர். அந்த செயலை வெறும் 12 மணி நேரத்திற்குள் அசால்ட்டாக செய்துள்ளது அஜித்குமாரின் வலிமையான ரசிகர்படை.