நேர்கொண்ட பார்வைப் படத்தினைத் தொடர்ந்து, அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதில், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்படத்திற்காக, அஜித் குமார் புதிய தோற்றத்தினை முயற்சி செய்து வருகின்றார். அவருடைய புதிய புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்தப் படத்தில், அஜித் குமார் பிளாக் ஹேர்ஸ்டைலினைப் பயன்படுத்த உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க, நடிகர் அருண் விஜய்க்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. மேலும், இந்தப் படத்தில் நடிக்க நடிகைகள் ரகுல் பீரித்தி சிங், நஸ்ரியா, த்ரிஷா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இவர்களில் யார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்கள் என்பதுப் பற்றியத் தகவலை விரைவில் படக்குழு அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்திற்காக முதலில் பைக் ரேஷர் தொடர்பான கதை உருவாக்கப்பட்டதாகவும், பின்னர் அரசியல் தலைவர் கதை உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் கோலிவுட்டினையே உலா வந்தன. இதனிடையே, இந்தப் படத்திற்காக, மூன்று போலீஸ் கதைகளை உருவாக்கியதாகவும், அதனை ஹெச் வினோத் அஜித் குமாரின் பார்வைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அஜித் குமார் ஏற்றுக் கொள்ளும் கதைக்கு ஏற்ப பிற வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படம் வரும் 2020 மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்தப் படம் வரும் 2020 தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.