வலிமைப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதனையடுத்து, இப்படத்தின் சூட்டிங் தற்பொழுது தொடங்கி உள்ளது. இதில், முதல் ஷெட்யூலில், அஜித் குமார் நடித்து வருகின்றார்.
நேர்கொண்டப் பார்வைப் படத்தினை இயக்கிய, ஹெச். வினோத்தே இந்தப் படத்தினையும் இயக்குகின்றார். இந்தப் படத்தினையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூரேத் தயாரிக்கின்றார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக, நடிகை ப்ரனிதி சோப்ராவினை போனி கபூர் சிபாரிசு செய்து வருகின்றார் என்ற செய்திகள், கோலிவுட் வட்டாரத்தில் பலமாக அடிபட்டு வருகின்றது. இந்தப் படத்தில் வெங்கட் பிரபு தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில், அஜித் குமார், டூப் யாரையும் பயன்படுத்தாமலே நடித்து வருகின்றாராம். படத்தின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிடக் கூடாது என்பதில், படக்குழுவினர் மிக உஷாராக உள்ளனர். மங்காத்தா படம் தொடங்கி, தற்பொழுது வரை டூப் நடிகரைப் பயன்படுத்தாமல் அஜித்குமார் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.