அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் சூட்டிங்கானது, தற்பொழுது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.
இந்தப் படத்தின் அப்டேட் எப்பொழுது வெளியாகும் என, ரசிகர்கள் வெறிபிடித்தவர்கள் போல், சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதலில் வருகின்ற மே மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத்திற்கு இடையில், ஒரு சில கருத்து வேறுபாடு இருந்ததாகவும் பின்னர் சரியான கதை அமைந்துவிட்டதால், படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தப் படத்தில், தல அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக மீண்டும் களமிறங்குகின்றார். போலீஸ் கதாப்பாத்திரங்களை இயக்குவதில், வல்லவரான ஹெச்.வினோத், ஒவ்வொரு காட்சியினையும் செதுக்கி உள்ளாராம். இந்தப் படத்தின் சூட்டிங்கானது, 65% நிறைவடைந்துவிட்டதாகவும், இந்தப் படத்தில் அஜித்குமாருக்கு மூன்று பேர் வில்லன்களாக நடித்துள்ளனர் எனவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அடுத்த கட்ட சூட்டிங்கானது, கொல்கத்தாவிலும் மற்றும் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவிலும் நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது. இதனால், அஜித்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.