நேர்கொண்ட பார்வைக்குப் பின், சிறிது இடைவெளிக்குப் பிறகு, தல அஜித்குமார் நடிக்கும் 60வது படம் பற்றியத் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இப்படத்தினையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், திரு போனிகபூர் தயாரிக்க உள்ளார். இது இவரும், அஜித் குமாரும் இணையும் இரண்டாவது படமாகும். இந்தத் திரைப்படத்தினையும், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
ஏகே 60 எனக் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் பெயரும், இன்று வெளியாகி உள்ளது. இதற்கு வலிமை என்றுப் பெயர் வைத்துள்ளனர். வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து, வலிமை என்றப் பெயரினை வி (Valimai) வரிசையில் அஜித் குமார் பயன்படுத்தி உள்ளார்.
இத்திரைப்படத்தின், சேட்டிலைட் உரிமைகள் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளதாக, அஜித்குமாரின் ஆஸ்தான செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனை தற்பொழுது, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், டிரெண்ட் செய்து வருகின்றனர்.