டிசம்பர் 13ம் தேதி சூட்டிங்! வலிமை அப்டேட் வெளியானது!

09 December 2019 சினிமா
valimaishooting.jpg

வருகின்ற டிசம்பர் 13ம் தேதி, வலிமை படத்தின் சூட்டிங் ஆரம்பமாக உள்ளது. இது பற்றி பிரபல சினிமா விமர்சகர்கள் தகவல்கள் அளித்துள்ளனர்.

அஜித் நடிக்கும் #தல60 படத்திற்கு வலிமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் சூட்டிங் எப்பொழுது ஆரம்பிக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்தப் படம் வருகின்ற மே மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சூட்டிங் தொடங்க தாமதமாகியுள்ள நிலையில், இப்படம் வரும் தீபாவளிக்கு, அதாவது 2020ம் ஆண்டு வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். இத்திரைப்படம், நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இணையும் இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின், மறைந்த நடிகை ஸ்ரீதேவியன் கணவர் இப்படத்தினையும் தயாரிக்கின்றார். இந்தப் படத்திற்காக முதலில், அரசியல்வாதியின் கதை உருவாக்கப்பட்டதாகவும், பின்னர் ரேஸ் பற்றியக் கதை உருவாக்கப்பட்டதாகவும், கடைசியில் போலீஸ் கதை இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கின்றார். இந்தப் படத்தின் கதாநாயகி யார், என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், வருகின்ற டிசம்பர் 13ம் தேதி ஹைதராபாத்தில் ஸ்டுடியோவில் திரைப்படத்தின் சூட்டிங் தொடங்குகின்றது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அஜித்குமாரின் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS