மே 1ம் தேதி அன்று, அஜித் நடித்து வருகின்ற வலிமை படத்தினை வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.
அஜித் குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படமானது, கடந்த ஒரு வருடமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் படத்திற்கு அடுத்ததாக எடுக்கப்பட்ட விஜயின் மாஸ்டர் திரைப்படமானது, தற்பொழுது வெளியாக உள்ளது. ஆனால், தொடர்ந்து அஜித்தின் படமானது, மெதுவாக எடுக்கப்பட்டு வருகின்றது.
இடையில் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக, வலிமை படத்தின் சூட்டிங்கானது தடைபட்டது. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்துமே, கொரோனா பயத்தின் காரணமாக தற்பொழுது ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜிராவ் சினிமா சிட்டியில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தின் சூட்டிங்கின் பொழுது, அஜித்குமாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல், அவர் நடித்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் முடிவிற்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அம்மா செண்டிமென்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தின், பர்ஸ்ட் லுக் அல்லது படத்தின் மோஸன் போஸ்டரானது, வருகின்ற புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும், எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு வெளியாகும் பட்சத்தில், இந்தப் படமானது, அஜித்குமாரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் மே 1ம் தேதி அன்று, வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.