வந்தே பாரத் மிஷன் 2! 30,000 பேரை மீட்கத் திட்டம்!

14 May 2020 அரசியல்
vandhebharat.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே-17ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூன்று லட்சம் பேர் தற்பொழுது வரை மரணமடைந்து உள்ளனர். இதன் காரணமாக, நோய்க்கு மருந்துத் தயாரிக்கும் பணியானது, தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகம் முழுவதும் இந்த நோய்க்காக ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளும், இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாகப் பின்பற்றி வருகின்றன. வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்ற கோடிக் கணக்கான இந்தியர்கள், இந்த ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களை இந்தியாவிற்கு அனுமதிக்கும் படி, வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு வந்தே பாரத் என்றத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது.

இதனடிப்படையில் முற்கட்டமாக, கடந்த ஏழாம் தேதி முதல் 14ம் தேதி வரை 64 விமானங்களை 12 நாடுகளுக்கு இயக்கியது இந்திய அரசு. அதன் மூலம், சுமார், 14,800 இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டுள்ளது. இதனைப் போல அடுத்த கட்டத்தினைக் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற மே 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை மீண்டும் வந்தே பாரத் திட்டமானது பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இரண்டாவதுக் கட்டத்தில் சுமார் 149 விமானங்களானது இயக்கப்பட உள்ளது. அதன் மூலம், 20 நாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார், 30,000 இந்தியர்களை மீட்கும் பணியானது நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, ஆஸ்திரேலியா, அர்மேனியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு அழைத்து வரப்படும் நபர்களிடம், விமானக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS