யூடியூப்பில் நடிகை வனிதாவினை திட்டிக் கொண்டு இருந்த சூர்யா தேவி என்றப் பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
நடிகை வனிதா கடந்த மாதம், பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர்பால் தனக்கு முறையாக விவாகரத்து வழங்கவில்லை என, அவருடைய முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இந்த சூழ்நிலையில், வனிதாவினை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வந்தார் சூர்யா தேவி. அவர் தொடர்ந்து, ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து, வனிதாவினை திட்டித் தீர்த்தார்.
மேலும், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகப் பேசி, வனிதாவினை கொச்சைப்படுத்தி வந்தார். இதனால், சென்னையில் உள்ள வடபழனி மகளிர் காவல்நிலையத்தில், நடிகை வனிதா புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அக்காவல்நிலையப் போலீசார் சூர்யாதேவியினைக் கைது செய்தனர்.