புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு, சாக்லேட், தண்ணீர் பாட்டில்! வரலெட்சுமி உதவி!

10 July 2020 சினிமா
varuhelpsmigrant.jpg

சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்குச் சென்ற புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் உதவி செய்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனால், பல கோடி புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்தப் பகுதிகளுக்குச் சென்று கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்காகத் தற்பொழுது, இந்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு ஸ்ராமிக் ரயில்களை இயக்கி வருகின்றது.

அவ்வாறு செல்லும் ரயில்களில் புலம்பெயரும் தொழிலாளர்கள் பல லட்சம் பேர், பயணம் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஊரடங்கானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து மேற்குவங்கத்திற்கு ரயிலில் செல்ல புலம்பெயரும் தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்களுக்கு, சக்தி அமைப்பினை நடத்தி வருபவரும், பிரபல நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் உதவி செய்துள்ளார்.

அவர் தன்னுடைய அறக்கட்டளை சார்பில், 1600 புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு 3 சப்பாத்தி, ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு ஸ்னீக்கர்ஸ் சாக்லெட் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதற்குப் பலரும் தற்பொழுது பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS