என்னை படுக்கைக்கு அழைத்தனர்! தமிழ் முன்னணி நடிகை பகீர்!

03 March 2020 சினிமா
castingcouch.jpg

பட வாய்ப்புக்காக என்னையும், படுக்கைக்கு அழைத்தனர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வரலட்சுமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர், வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பலப் படங்களில் நடித்துள்ளார். அவர், பெண்களுக்காக சக்தி என்ற அறக்கட்டளையும் வைத்து நடத்தி வருகின்றார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது, நான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட, படத்தில் நடிக்க என்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் எனக் கூறினர். ஆனால், நான் முடியாது எனக் கூறிவிட்டேன். அவர்கள் பேசிய ஆடியோவினைப் பதிவு செய்து வைத்துள்ளேன். பெண்கள் அப்படி யாராவது அழைத்தால், போகக் கூடாது. செய்யக் கூடாத தவறுகளை செய்துவிட்டு, பின்னர் புகார் அளிப்பது நியாயம் அற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS