கன்னியாகுமரி மாவட்ட எம்பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் அதிபருமான வசந்தகுமார் இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு, இந்தியாவின் பிரதமர் உட்படப் பலத் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 10ம் தேதி அன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் வசந்தகுமார். தொடர்ந்து அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 6.56 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர், துணை முதல்வர், முக ஸ்டாலின் உட்படப் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
வசந்தகுமாரின் உடலானது, காங்கிரஸ் கொடி போற்றப்பட்டு, அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று அவருடைய உடலானது நல்லடக்கம் செய்யப்படுகின்றது.