எந்த மொழியும் திணிக்கப்படாது எதிர்க்கப்படாது! வெங்கையா நாயுடு பேட்டி!

14 September 2020 அரசியல்
venkaiahnaidu.jpg

இந்தியாவில் உள்ள எந்த மொழியும் திணிக்கப்படாது எனவும், எதிர்க்கப்படாது எனவும், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் மும்மொழிக் கல்விக் கொள்கைக் குறித்து, பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டப் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல அமைப்புகளும், ஆளும் அதிமுக அரசும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும், மும்மொழிக் கொள்கை என்றப் பெயரில், மறைமுகமாக ஹிந்தியினை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியும் வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஹிந்தி நாள் விழாவின் பொழுது, ஆன்லைன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு, அதில் உரையாற்றினார். அவர் பேசுகையில், இந்திய மொழிகளுக்கு என, பழமையான வரலாறு உண்டு. இந்தியாவின் பன்முகத் தன்மையினை நினைத்து, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். ஹிந்தி மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றினைக் கற்க வேண்டும்.

அதே போல், ஹிந்தி தெரியாத மாணவர்கள் ஹிந்தி கற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தப் புதியக் கல்விக் கொள்கைத் திட்டத்தில், மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

HOT NEWS