கோலிவுட் சினிமாவின் கிசுகிசுக்கும் ஜோடிகளாக, தற்பொழுது விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டார் என, ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் உள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தினைத் தயாரிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்கு நெற்றிக் கண் எனப் பெயர் வைத்துள்ளனர். இது நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான படத்தின் பெயர் ஆகும். இப்படத்தினை ரௌவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
இப்படத்தினை அவள், தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர், குருஹாம், காதல் 2 கல்யாணம் படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இது நயன்தாரா நடிக்கும் 65வது திரைப்படமாகும். இதன் சூட்டிங் இன்று முதல் தொடங்க உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கைதிகளின் கையில் மாட்டும், கை விலங்கு உள்ளிட்டப் பொருட்கள் உள்ளன. இதனைப் பார்க்கும் பொழுது, இத்திரைப்படம் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாக வாய்ப்புள்ளது என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.