இயக்குநர், பாடல் ஆசிரியர் எனப் பல வித்தைகளுக்குச் சொந்தக்காரர் எனப் பெயர் பெற்றவர் விக்னேஷ் சிவன். இவரும், நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்த விஷயம், தமிழ் சினிமாவினைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.
அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற தகவல்கள், இணையத்தில் கசிந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது அன்னையர் தினத்திற்கான வாழ்த்தினர், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றினை, பதிவேற்றம் செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், நயன்தாரா ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருக்கின்றார். அதற்கு, கருத்துத் தெரிவித்துள்ள விக்னேஷ், அந்தக் குழந்தையின் தாய்க்கும், என்னுடைய வருங்காலக் குழந்தையின் தாய்க்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.