சென்னையில் நடைபெற்ற விபத்தில், சுபஸ்ரீ என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள். இதனைத் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும், நட்சத்திரங்களும் இந்த பிளக்ஸ் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல், பல நடிகர்களும் இதனைக் கூறியுள்ளனர்.
இந்த வரிசையில், தளபதி விஜய் அவர்கள், தன்னுடைய ரசிகர்களுக்கும், ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் பாடல் வெளியாக உள்ளது. இதற்கு, ரசிகர்கள் யாரும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கக் கூடாது என தன்னுடைய ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே சமயம், இதனை கவனிக்கவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விஜயின் ரசிகர்கள் விஜயின் பேச்சை கேட்டு இனி பிளக்ஸ் வைக்கமாட்டோம் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். தற்பொழுது மட்டும் கேட்காமல், இதனை தொடர்ந்து கடைபிடிப்பது நம் தமிழ் சமூகத்திற்கே நல்லது.