கடந்த வாரம், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விஜயிடம் இரண்டு நாட்கள் விசாரணையும் நடத்தினர். அது தவிர, அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில், மூன்று நாட்களாக, சோதனை நடத்தினர். இதில், அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து, 77 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இருப்பினும், விஜயிடம் இருந்து என்னக் கிடைத்தது என்பதுப் பற்றியத் தகவல் வெளியாகவில்லை.
இதனிடையே, நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியன் உள்ளிட்டோர், சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள், நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இது குறித்த அறிவிப்பினை, விரைவில் வருமான வரித்துறை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.