இந்திய அளவில், நடிகர் விஜய் புதியதாக நம்பர் ஒன் இடத்தினைப் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என, அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தொடர்ந்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். இவர் கடைசியாக நடித்த மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்டப் படங்கள் அனைத்தும், வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளன. இதனால், அவருடைய மதிப்பானது பல மடங்கு உயர்ந்துள்ளது.
அது மட்டுமின்றி, அவருடைய செல்வாக்கும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகரித்து உள்ளது. அவர் தற்பொழுது நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் பாடல்கள், ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதனிடையே, இந்தப் படமும் வசூலில் அதிகம் சம்பாதிக்கும் என்று தற்பொழுதே கோலிவுட் சினிமா ஜோசியர்கள் ஆரூடம் கணிக்கின்றனர்.
இந்தப் படத்தினைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில், நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் பரவியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கானக் கதை விவாதத்தில், தற்பொழுது நடிகர் விஜய் ஈடுபட்டு உள்ளார். இந்தப் படத்தினை, ஏஆர்முருகதாஸ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு சம்பளமாக 100 கோடி ரூபாயினை, நடிகர் விஜய் பெற்றுள்ளார்.
இந்திய அளவில் யாரும் இவ்வளவு பெரியத் தொகையினை, சம்பளமாகப் பெற்றதில்லை. இதற்கு முன்னர், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 2.0 படத்திற்காக 80 கோடி ரூபாய் பணத்தினை சம்பளமாகப் பெற்றார். தற்பொழுது பாலிவுட், டோலிவுட் என அனைத்தையும் விஞ்சும் விதத்தில் நடிகர் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளத்தினைப் பெறுகின்றார்.