ஒன்றரைக் கோடி பண உதவி அறிவித்த நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் போட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர், தங்களால் இயன்ற உதவியினை நிவாரண வங்கிக் கணக்கிற்கு வழங்கும்படிக் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் தங்கள் சார்பில் பணமாகவும், பொருளாகவும் உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஒன்றரைக் கோடி ரூபாயினை உதவியாக அறிவித்தார். அத்துடன், தற்பொழுது தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் பணம் வழங்கியுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில், உணவுப் பொருட்கள், மாஸ்க்குகள், அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
அதற்காக, தற்பொழுது அந்த இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கணக்கிற்கு, பணத்தினை அனுப்பியுள்ளர் விஜய். இதன் மூலம், விஜய் மக்கள் இயக்கத்தினர், மேலும் அதிகளவில் உதவி செய்ய இயலும் என்று அவர் நம்புகின்றார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் போலீஸ் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு, மாஸ்க்குகள் உள்ளிட்டவைகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.