தற்பொழுது நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பானது, நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில், நடிகர், விஜய், விஜய்சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கின்றார்.
இந்தப் படத்தின் சூட்டிங்கானது, நெய்வேலியில் நடக்கும் பொழுது, வருமான வரித்துறையினர் சோதனைக்காக விஜயினை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்ற, இந்த வருமானவரித்துறை விசாரணையின் காரணமாக, மாஸ்டர் படப்பிடிப்பு தடைபட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை, மாஸ்டர் படப்பிடிப்பின் பொழுது, பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயின் ரசிகர்கள் தள்ளுமுள்ளு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
நேற்று, மீண்டும் விஜயின் ரசிகர்கள், நடிகர் விஜயினைக் காண்பதற்காக குவிந்துவிட்டனர். அவர்களை, காவலர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர்களை வேன் மீது ஏறி பார்த்த விஜய், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு தற்பொழுது தன்னுடைய டிவிட்டர் பதிவின் மூலம் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020