மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு, நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
விஜய் டிவி நடிகரும், சின்னத்திரை காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இருதய வலியின் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பணப் பிரச்சனை காரணமாக, பல மருத்துவமனைகளுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர், நேற்று அவர் எதிர்பாராத விதமாக, அவர் மரணமடைந்தார்.
இதற்குப் பலப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை கலைஞர்கள், வடிவேல் பாலாஜியின் கூட்டணி நடிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதனிடையே, இன்று நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று அவருடையக் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். வடிவேல் பாலாஜிக்கு மலர் வளையம் வைத்து தன்னுடைய இறுதி மரியாதையினை செலுத்தினார்.