நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என அர்த்தம்! விஜய்சேதுபதி!

20 October 2020 சினிமா
800thmovie.jpg

நன்றி வணக்கம் எனக் கூறினால், எல்லாம் முடிந்து விட்டது என அர்த்தம் என்று, நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்து உள்ளார்.

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தயார் நினைவஞ்சலியானது, அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்திற்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டப் பலத் தலைவர்கள் சென்று, நினைவஞ்சலி செலுத்தினர். இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவர் பின்னர் திரும்பி வரும் பொழுது, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது 800 படத்தில் இருந்து விலகி விட்டீர்களா என, நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், நன்றி வணக்கம் என்றுக் கூறினார். அதற்கு என்ன அர்த்தம் என்றுக் கேட்டனர். நன்றி வணக்கம் என்றால், எல்லாம் முடிந்துவிட்டது என அர்த்தம் என்றுக் கூறிவிட்டார் கிளம்பி விட்டார். இதனால், அவர் 800 படத்தில் இருந்து விலகிவிட்டதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.

HOT NEWS