தந்தை எஸ்ஏசி, தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பெயரில் புதியக் கட்சியினை ஆரம்பித்து உள்ளதால், புதிய இயக்கத்தின் பெயரினை விஜய் அறிவித்து உள்ளார்.
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர், நான் தான் விஜய்க்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன் எனவும், அந்த ரசிகர் மன்றம் என்னுடையது எனவும் கூறி, அதனை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இது விஜய்க்கும், எஸ்ஏசிக்கும் இடையில் பிரச்சனையினை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விஜய் அவசர அவசரமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், தன்னுடைய ரசிகர்கள் என்னுடைய அப்பா ஆரம்பித்துள்ள கட்சியில் எனக்காக சேரக் கூடாது என்றுக் கூறியுள்ளார். மேலும், அதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து, நடிகர் விஜய் பேசினார். பின்னர், தன்னுடைய புதிய இயக்கத்தின் பெயரினை விஜய் அறிவித்து உள்ளார். அகிய இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்றப் பெயரினை அறிவித்து உள்ளார்.
இந்த அறிக்கையினை, விஜயின் கையொப்பத்துடன் புஸ்ஸி ஆனந்த் என்பவர், அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். இதனால், விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தனது இயக்கத்தின் நிர்வாகிகளையும் புதியதாக நியமித்து வருவதால், எஸ்ஏசியின் கனவு தவிடு பொடியாகி உள்ளது.