5 கோடி வழங்கும் விஜயகாந்த்! மே-3க்குப் பின் நிவாரணம் வழங்க முடிவு!

14 April 2020 அரசியல்
captain10.jpg

தற்பொழுது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன.

தன்னார்வலர்கள் பலரும், பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் பல நலத்திட்ட பணிகளையும் செய்து வருகின்றனர். இதனிடையே, தேமுதிகவின் சார்பில் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய டிவிட்டர் பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில் மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு, என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

HOT NEWS