சாதனைப் படத்தில் சங்கத் தமிழ் நடிகன் விஜய் சேதுபதி!

22 August 2019 சினிமா
vijaysethupathi1.jpg

உலக அளவில் பல சாதனைகளப் புரிந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இத்தகவல் தற்பொழுது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பிரபலமான நடிகராக, தற்பொழுது விஜய் சேதுபதி உள்ளார். இவர், உலக அளவில் பல விருதுகளையும், ஆறு ஆஸ்கர் விருதுகளையும் வென்ற, ஹாலிவுட் திரைப்படமான பாரஸ்ட் கம்ப் (forrest gump) என்ற படத்தின் ரீமேக்கில், நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை, பாலிவுட் நடிகர் திரு. அமீர் கான் வைத்திருக்கிறார். இந்நிலையில், அவர் அந்த பாரஸ்ட் கம்ப் படத்தினை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். அதில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தப் படத்தின் நாயகன் டாம் ஹேங்க்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்த நாயகனே, டாவின் கோட் பட வரிசையில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS