கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, உடலின் வலது பகுதி செயலிழந்து, பக்கவாத நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவரை, நடிகர் விஜய்சேதுபதி சென்று சந்தித்துள்ளார்.
ஆதித்யா டிவியில் வரும், அட டேய் நிகழ்ச்சியானது, தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலம். இதில், குட்டி கோபியும், லோகேஷ் பாப்பும் இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், தலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் லோகேஷ் பாப்.
அவருடைய உடலின் வலது கை மற்றும் வலது காலானது, முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், அவரை தனியார் மருத்துவனையில் அனுமதித்து உள்ளதாகவும் தெரிவித்த குட்டி கோபி, அவருடைய மருத்துவ செலவிற்கு குறைந்தது ஏழு லட்சம் ஆகும் எனவும், தெரிவித்தார்.
தங்களால் இயன்ற பொருளுதவியினை செய்யவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இவருடைய வேண்டுகோளினை ஏற்ற, சன் நெட்வொர்க் குழுமம், லோகேஷ் பாப்பின் முழு மருத்துவ செலவினையும் ஏற்றது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதில், பூரண குணமடைந்துவிட்டதாக, குட்டி கோபி தெரிவித்தார்.
இதனையடுத்து, நானும் ரௌடி தான் படத்தில், அவர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்ததால், லோகேஷ் பாப்பினை நேரில் சென்று சந்தித்து பேசினார் சேதுபதி. இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.