நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.
இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் காரணமாக, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தப் படமானது, கடந்த மே மாதம் வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படத்தினை, தீபாவளிக்கு வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இந்தப் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், இந்தப் படத்தில் ஒரு மாஸான வில்லனாக நடித்துள்ளேன். தொடர்ந்து ஒரே மாதிரியானக் கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. யாரையும் புண்படுத்தாத வகையில் புதிய கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புகின்றேன் என்றுக் கூறியுள்ளார்.
இவருடைய இந்த அறிவிப்பால், விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி, விஜயின் ரசிகர்களும் தற்பொழுது குஷியாகி உள்ளனர். இப்படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகும் என, தற்பொழுது வரை இப்படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.