நடிகர் விஜய் அவர்களின் மகன் சஞ்சய், விரைவில் கதாநாயகனாக அறிமுக உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் விஜயின் மகன் சஞ்சய். அவர் வேட்டைக்காரன் படத்தில் வரும் நான் அடித்தால் தாங்கமாட்ட பாட்டில் விஜயுடன் ஆடுவார். அவர் தற்பொழுது படித்து வருகின்றார். இந்நிலையில், விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இடையில், ஒரு குறும்படத்திலும் நடித்து இருந்தார்.
சஞ்சய் நடிக்கும் படத்தில், அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தெலுங்கில் வெளியாக உள்ள உப்பண்ணா படத்தின் தமிழ் ஈமேக்காக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையில் நடிகர் விஜயின் மகன் கதாநாயகனாக நடிப்பார் எனவும், இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் இணைந்து, விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.