உபி ரவுடி விகாஷ் டூபே தப்பிக்க முயற்சி! எண்கவுண்டரில் சுட்டு கொலை!

10 July 2020 அரசியல்
vikasdubeyencountered.jpg

மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஷ் டூபே, தப்பிக்க முயற்சித்த பொழுது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்திரப் பிரிதேச மாநிலத்தில் எட்டுப் போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஷ் டூபேயினை, மூன்று மாநிலப் போலீசார் தேடி வந்தனர். கான்பூர் மாவட்டத்தில் தன்னுடைய வீட்டில் பதுங்கியிருந்த ரவுடி விகாஷ் டூபேயினைப் பிடிப்பதற்கு டிஎஸ்பி உட்பட, பலப் போலீசார் சென்றனர். இருப்பினும், அங்கு பதுங்கியிருந்த ரவுடியின் கூட்டாளிகள், போலீசாரை சராமாரியாகத் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர். இதில், 8 போலீசார் மரணமடைந்தனர். மேலும், அங்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளின் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, டூபே தப்பித்து விட்டான்.

அவன் மீது, ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, 8 போலீசாரைக் கொன்றதால், டூபேயினைப் பிடிக்க 27 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. மூன்று மாநிலப் போலீசார் அவனைத் தேடும் குற்றவாளிகளாக அறிவித்தன. இந்நிலையில், நேற்று மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் விகாஷ் டூபே கைது செய்யப்பட்டான்.

அவனை இன்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திற்கு, அவனை அழைத்துச் சென்ற பொழுது, அழைத்துச் சென்றக் கார் விபத்துக்குள்ளானது. இதனால், அங்கிருந்த போலீஸாரின் துப்பாக்கியினை எடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். இதில், நான்கு போலீசார் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, தப்பிக்க முயன்றதற்காக அவன் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

HOT NEWS