உத்திரப்பிரதேசம் விகாஷ் டூபேயின் கூட்டாளியினை போலீசார் சுட்டுத் தள்ளினர்!

08 July 2020 அரசியல்
amardubey.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தினை மிரட்டும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன, விகாஷ் டூபேயின் கூட்டாளியான அமர் துபேயினை உத்திரப்பிரதேச போலீசார் சுட்டுத் தள்ளினர்.

கடந்த ஜூலை 2ம் தேதி அன்று, உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பதுங்கியிருந்த விகாஷ் டூபேயினைப் பிடிப்பதற்கு போலீசார் சென்றனர். அவர்களை டூபேயின் கூட்டாளிகள் தாக்கியதில் எட்டு போலீசார் உயிரிழந்தனர். இதனால், அவனைப் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். கான்பூரினைச் சேர்ந்த டூபே, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை அடித்தல், கடத்தல், என பல விஷயங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

அவருடைய ரவுடிக் குழுவில் பலர் இடம் பெற்று இருப்பதாக, போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவரைப் பிடிப்பதற்காக ஜூலை 2ம் தேதி அன்று, அம்மாவட்ட எஸ்பி, சப் இன்ஸ்பெக்டர், பிற போலீசார் என ஒரு படையே, விகாஷ் டூபேயினை கைது செய்யச் சென்றனர். அவர்கள் வரும் விஷயத்தினை ஏற்கனவே அறிந்திருந்த டூபே, தன்னுடைய அடியாட்களுடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தான்.

இவர்கள் வந்ததும், அவர்கள் மீது சராமாரியாகச் சுட்டனர். இதில் 8 போலீசார் மரணமடைந்தனர். மேலும், இறந்த போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, டூபேயின் ஆட்கள் தப்பிச் சென்றனர். இவ்வளவு பெரிய தாக்குதலால், அவனை தேடப்படும் குற்றவாளியாக, உத்திரப்பிரதேச போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அமர் துபே இருப்பதாக, தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த போலீசார் நடத்திய என்கவுண்டரில், அமர் துபே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைப் போலீசார் உறுதிபடுத்தி உள்ளார். அமர் துபே, விகாஷ் டுபேயின் முக்கியமானக் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS