என்ன ஆச்சு நம்ம விக்ரமுக்கு? விக்ரம் ஒரு பார்வை!

06 September 2019 அரசியல்
vikramlander12.jpg

இன்று நள்ளிரவு 1.30 மணியில் இருந்து 2.30 மணி அளவில், விக்ரம் லேண்டரை, நிலவில் உள்ள மான்சினஸ்-சி மற்றும் சிம்பிலியஸ்-எஸ் என்ற இரு பள்ளங்களுக்கிடையே, தரை இறக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான ஆயத்தப் பணிகள், முதல் அனைத்துப் பணிகளும், பணியாட்களும் துரிதமாக செயல்பட்டு வந்தனர். அதனை நேரில் காண்பதற்கு, நேற்று இரவு, இஸ்ரோ மையத்திற்கு, நம் நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி வருகை புரிந்தார். அவர் பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து, அந்த அரிய நிகழ்வைக் காணப் போவதாகவும், டிவிட் செய்திருந்தார்.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை அந்தப் பகுதியில், தரையிறக்குவது தான் இருப்பதிலேயே, சவாலான நிகழ்வு ஆகும். இதுவரை, இதனை இந்தியா செய்ததில்லை. இதனை முன்னிட்டு, இந்தியா முழுவதுமே இந்த தரையிறங்கும் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்ப்பார்த்தது.

திட்டமிட்டப்படி, சுற்றுவட்டப்பாதையில் இருந்து பிரிந்து, அந்த தரையிறங்கும் பகுதியில் நுழைந்ததும், விக்ரம் லேண்டரில் இருந்து வரவேண்டிய சிக்னல் முற்றிலும் கட்டானது. இதனால், விஞ்ஞானிகள் குழம்பினர், இருப்பினும், அதன் சுற்றுவட்டப்பாதையை கூறும் ஆர்ப்பிட்டர் சிறப்பாக இன்னும் செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அங்கு 95% ஆராய்ச்சிகளை செய்ய இயலும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இருப்பினும், இந்த சவாலானப் பணியில், சரியாக தரையிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில், இந்த விக்ரம் லேண்டர் இருக்கும் பொழுது, அதன் சிக்னல் கட்டானதாக, இஸ்ரோ தலைவர் டாக்டர்.சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் இதற்கான தகவல்களை ஆய்வு செய்ய உள்ளோம் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில், தரையிறங்கும் முயற்சித் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை இந்த முயற்சியில் விக்ரம் லேண்டர் தரையில் மோதி இருக்கலாம் அல்லது எதிலாவது மோதி உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால், அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். வெற்றிகரமாக தரையிறங்கி இருந்தால், கண்டிப்பாக, அதிலிருந்த பிரக்யான் ஆய்வுக் கருவி, தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கும்.

HOT NEWS