இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது! சிக்னல் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு!

20 September 2019 தொழில்நுட்பம்
vikramlanderfound.jpg

இன்றுடன் விக்ரம் லேண்டருடன் இருந்து வந்த, ஆராய்ச்சியானது முடிவிற்கு வர உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், விக்ரம் லேண்டரை நிலவில் இறக்கும் முயற்சியில், நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருந்தனர். இதில், துரதிர்ஷ்டவசமாக நிலவின் தரைக்கு, சுமார் 2.1 கிலோ மீட்டர் உயரம் இருக்கையில், விக்ரம் லேண்டருடன் இருந்து வந்த தொலைத்தொடர்பு துண்டானது. இதனால், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, அதனைத் தேடும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இருப்பினும், அதற்கான பலன் எதுவும் ஏற்படவில்லை. இதனால், விக்ரம் லேண்டர் முயற்சித் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், இந்த முயற்சிக்கு உலகில் உள்ள பல நாட்டுத் தலைவர்களும், தங்களுடையப் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலைமையில், அடுத்த 14 நாட்களுக்கு, விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ளும் முயற்சி தொடரும் என, இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சிவன் தெரிவித்தார். தொடர்ந்து, விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ளும் முயற்சியும் நடைபெற ஆரம்பித்தது. நிலவினைச் சுற்றி வரும் ஆர்பிட்டரின் உதவியுடன், லேண்டர் இருந்த இடத்தினைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். இருப்பினும், அதனைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

தரையிறங்கும் பொழுது, நிலவின் ஈர்ப்பு விசையின் காரணமாக, விக்ரம் லேண்டர் அதி வேகமாக, நிலவின் தரையில் மோதியுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, துண்டு துண்டுகளாக சிதறாமல், அப்படியே விழுந்துள்ளது.

இதனால், விஞ்ஞானிகளுக்கு சற்று நம்பிக்கை இருந்தது. காலம் குறைவாக இருந்ததால், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியை நாடியது இஸ்ரோ. நாசாவும், விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தினைப் படம் பிடித்துத் தருவதாகக் கூறியது. இருப்பினும், அது குறித்த எவ்விதத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இன்று விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்வதற்கான கடைசி நாள் ஆகும். பின்னர், நிலவின் தென் பகுதியில், இரவு காலம் ஆரம்பித்து விடும். பின்னர், அப்பகுதியில் நம்மால் ஆராய்ச்சி செய்ய இயலாது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட இந்த முயற்சியில் தோல்வியின் விழும்பில் உள்ளனர். இருப்பினும், முதல் முயற்சியிலேயே இவ்வளவு பெரிய விஷயத்தை நெருங்கிய, முதல் நாடு நம் நாடு தான்.

HOT NEWS