விக்ரம் லேண்டர் முடிந்தது! அடுத்த திட்டத்தினை அறிவித்த இஸ்ரோ தலைவர்!

22 September 2019 தொழில்நுட்பம்
sivan.jpg

விக்ரம் லேண்டரைத் தேடும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த 14 நாட்களாக இஸ்ரோ விஞ்ஞானிகளால், பெரிய அளவில் தேடப்பட்டு வந்த விக்ரம் லேண்டர் கடைசி வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனை முன்னிட்டே நேற்று செய்தியாளர்களை சந்தித்த, இஸ்ரோ தலைவர் திரு. சிவன், சந்திராயன் 2 திட்டம் கிட்டத்தட்ட 98% வெற்றிப் பெற்றது எனவும், அடுத்தத் திட்டத்தினையும் அறிவித்தார். 2021ல் ஒரு ஆண் விண்வெளி வீரரை, விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது என தெரிவித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய அளவில் நடைபெறும் முயற்சி ஆகும். இந்த திட்டத்திற்கு, ககன்யான் என பெயரிட்டுள்ளனர்.

சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லாண்டர், தரையில் இறங்கும் பொழுது, அதனுடன் இருந்து வந்த, தொலைத்தொடர்பு துண்டானது.

மேலும், அது நிலவின் ஈர்ப்பு விசையால், தரையில் மோதி விழுந்துள்ளது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், விக்ரம் லேண்டரின் தொடர்பினைப் பெறவில்லை.

HOT NEWS